04, 11. 2018
எந்த அரசாங்கமாக இருந்தாலும் சுகாதார அமைச்சர் பதவியை ராஜித்த சேனாரத்னவே வகிக்க வேண்டும் என ராஜித்த சேனாரத்னவிற்கு ஆதரவாக செயற்படும் சில தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரச தாதி அதிகாரிகள் சங்க தலைவர் சமன் ரத்னப்ரிய மற்றும் அரச குடும்ப சேவை அதிகாரிகள் சங்க தலைவர் தேவிகா கொடித்துவக்கு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ராஜித்த சேனாரத்னவை மீண்டும் சுகாதார அமைச்சராக நியமித்தால் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கருத்து முன்வைத்து வருகிறது.
சுகாதார அமைச்சை சிறப்பாக வழிநடத்தியவர் ராஜித்த சேனராத்ன.
தொழிற்சங்கம் என்ற ரீதியில் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என அரச தாதி அதிகாரிகள் சங்க அரச குடும்ப சேவை அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment