Saturday, November 3, 2018

மேலும் சில அமைச்சர்கள் இன்று இரவு சத்தியப்பிரமாணம்?


03.11.2018

அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று இரவு சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சத்தியப்பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதேநேரம், நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்றார்.

அத்துடன், கலாசார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி.நாவின்னவும் நேற்றைய தினம் பதவியேற்றார்.

இதற்கமைய, புதிய அமைச்சரவை அமைச்சர்களாக 15 பேரும், இராஜாங்க அமைச்சராக 8 பேரும், பிரதி அமைச்சராக 8 பேரும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment