சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இலங்கை பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை பிரதேசத்தை சேர்ந்த வியாபாரிகளான 45 வயதான பெண்ணொருவரும் மற்றும் 40 வயதான ஆண்ணொருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இன்று காலை குவைத்திலிருந்து டுபாயினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது சந்தேக நபர்களின் பயண பையில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்
குறித்த நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது 53,200 சிகரெட்டுகள் “கோல்ட் லிப்” மற்றும் பென்சன் மற்றும் ஹெட்ஜஸ் வகையான 266 சிகரெட் பக்கற்றுகளை கைப்பற்றியுள்ளனர். சுமார் 26 இலட்சத்து 60ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment