Monday, October 8, 2018

இடைக்கால அரசமைக்க கூட்டு எதிர்க்கட்சி தீவிரம்!

08. 10. 2018

ரணில் - மைத்ரி உறவில் விரிசலை ஏற்படுத்தி கூட்டணி அரசைக் கவிழ்ப்பதில் மும்முரமாக இருக்கும் கூட்டு எதிர்க்கட்சியினர் மஹிந்த தலைமையில் இடைக்கால அரசு அமைப்பதில் தீவிர கவனம் செலுத்துவதாக தெரிவிக்கிறது.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்ற கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களைக் கைவிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி தற்போது சுந்திரக் கட்சியுடனான சமாதாப் போக்கின் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முயல்கிறது.

இந்நிலையில், இடைக்கால அரசைப் பொறுப்பேற்பது தொடர்பில் மஹிந்த தலைமையில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக விமல் வீரவன்ச தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment