Thursday, October 25, 2018

கொலைத் திட்டத்தில் பொன்சேகாவுக்கும் தொடர்பு? நாமல்!

25.10.2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வா மீது குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொலிஸ் உளவாளி நாமல் குமார, தற்போது சரத் பொன்சேகாவுக்கும் தொடர்பிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

நாலக டி சில்வாவுடன் சரத் பொன்சேகா நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாகவம் அவ்வப்போது தனக்கெதிராகவும் பேசியுள்ளதாகவும் நாமல் விளக்கமளித்துள்ளதுடன் ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி அக்கறையின்றி இருப்பதாக ஏலவே சு.க தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sonakar.Com

0 comments:

Post a Comment