Monday, October 1, 2018

நூறு ரூபாயால் இடம்பெற்றுள்ள கொலை!

01.10.2018

ஹல்தமுல்ல – முருதஹின்ன – நிக்கபொத பகுதியில் இடம்பெற்ற கொலை, நூறு ரூபாய் பணப்பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதாக காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிக்கபொத பகுதியில் மரண வீடொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட வாய்த்தகராறால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர், அம்பாந்தோட்டை - சமகிபுர பகுதியை சேர்ந்த 38 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் மரண வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது மேலும் ஒரு நபருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் பொல்லினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று கட்டுநாயக்க பகுதியில் உள்ள சூதாட்ட நிலையத்திலும் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை ஏற்பட்ட வாய்த்தகராறால் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த 30 வயதான நபரே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கொலை செய்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது.

0 comments:

Post a Comment