, October 25, 2018
அம்பாறை மதுவரி திணைக்கள அலுவலகத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட பிரதேசங்களில், இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் மட்டும், போதைப்பொருள் தொடர்பான 434 குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, மதுவரி திணைக்களத்தின் அம்பாறை அலுவலகப் பொறுப்பாளர் என். ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்களில், ஐந்து குற்றங்கள் ஹெரோய்ன் போதைப்பொருள் தொடர்பானவை என்றும் அவர் கூறினார்.
சட்டவிரோதமான சிகரெட்டுகளைத் தம்வசம் வைத்திருந்தமை, 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சட்டவிரோதமாக சிகரெட் விற்பனை செய்தமை போன்ற குற்றச் செயல்களே, கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் அதிமானவையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச் செயல்களைப் புரிந்தவர்களுக்கு எதிராக அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பொத்துவில், தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மதுவரி திணைக்களத்தின் அம்பாறை அலுவலகப் பொறுப்பாளர் மேலும் தெரிவித்தார்.
நன்றி
Batti






0 comments:
Post a Comment