, 21 JUNE 2018
புற்று நோய் நோயாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் விலை கூடிய ஔடதங்களின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
ஔடதங்களின் விலைகளை குறைக்கும் முதற்கட்ட நடவடிக்கையின் கீழ் 48 வகையான ஔடதங்களின் விலைகளை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி , இரண்டாம் கட்ட நடவடிக்கையாக விலை அதிகமான ஔடதங்களின் விலைகளை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஔடதங்களின் விலை குறைக்கப்பட்ட பின்னர் , தனியார் மருத்துவமனைகளில் விலை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






0 comments:
Post a Comment