18.06.2018
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அவசர விபத்துச் சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (17) நடைபெற்றது.
ஹரீஸின் முகநூலில் …
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் 2000 மில்லியன் ரூபா செலவில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள அவசர விபத்துச் சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (17) மாலை 4 மணிக்கு குறித்த வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
ஹரீஸின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம், சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசால் காசிம், தேசிய நல்லிணக்க கலந்துரையாடல்கள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல.எம். நசீர் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பைசால் காசீமின் முகநூலில் …
பிரதியமைச்சர் பைசால்காசீம் அவர்களது அழைப்பின்பேரில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தன அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (17/06/2018) பிற்பகல் ஐந்துமணிக்கு கலந்துகொள்கின்றார்.
ரூபா 1449 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த அவசரசிகிச்சைப்பிரிவானது பைசால் காசீம்பிரதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் எடுத்த பிரயத்தனங்களின் பலனாக இன்று எம் மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
முழு தென்கிழக்கு பிராந்தியத்திற்குமான ஒரு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள இவ்வசதியினை பெற்றுக்கொள்வதில் பிரதியமைச்சர் பல சவால்களை எதிர்நோக்கி தன்னந்தனியாக ஒவ்வொரு தடைகளையும் மிகவும் நுணுக்கமாக தாண்டிவந்ததன் பலனாகவே இந்த நான்கு மாடிகளைக்கொண்ட கட்டிடம் அமையப்பெறவுள்ளது??
நன்றி
Srilanka Mus







0 comments:
Post a Comment