Sunday, September 2, 2018

நிந்தவூர் மக்கள் மஹிந்தவின் பக்கம் இணைவு (படங்கள்)

02.08.2018

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் நிந்தவூர் மக்கள் ஒன்றிணைய புறப்பட்டுவிட்டனர் முஸ்லிம்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு ஊர்களிகலிருந்தும்  அமைப்பாளர்கள் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் அம்பாறை  மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளரும், இளைஞர்கள் அமைப்பின் தலைவருமான
எஸ்.எம்.எம்.இர்ஷாத் (அதாப்) அவர்களின் தலைமையில்
நிந்தவூர் ஜெ.எம்.பைசால் அவர்களின் இல்லத்தில்  இன்று 02 ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், உட்பட அனைவரும் கலந்துகொண்டு
இக் கட்சியின் அமைப்பாளராக ஜெ.எம்.பைசால் அவர்கள் ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

மற்றும் ஏனையோர் கட்சியின் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment